நினைவெல்லாம் நீ..!

மறக்க முயலும் போதுதான்

உயிர்ப்பிக்கின்றன.

உன் நினைவுகள்…
புதைக்க நினக்கும் போதுதான்
கீறித்துளிர்க்கின்றன.
உந்தன் ஞாபகங்கள்…
அழிக்க
எண்ணும் போதுதான்
கண்முன் தெரிகின்றன
உந்தன் பிம்பங்கள்…
என்ன செய்ய
உன்னை நினைத்து விட்ட
குற்றத்திற்காக நான்
செத்து விடவா முடியும்?
இன்றுவரை கூட
மறந்து விடத் தோன்றவில்லை
நேற்றின் பிரதிபலிப்பால்
மனசின் வேதனை எளிதில் ஆறாது…
முகம் மறக்கும் முன்பே
முகவரியை தொலைத்து நிற்கிறது
என் வாழ்க்கை…
நீர்ச்சுழலில் சிக்கிய சருகாய்
நிறைவேறாத ஆசைகளின் அலையிலே
சுழலுகின்ற மனசு
மீண்டும் வருமென்ற நம்பிக்கை
சிறிதும் எனக்கில்லை….
வாழவேண்டும் என்ற
நிர்ப்பந்தத்தால்
எத்தனை வேதனைகளைத்தான்
விருதுகளாய் பெறுவது
காலம் கேள்வி கேட்க
பதில் சொல்ல மறுக்கிறது மனது…
இனியவளே!
புரட்டியது புத்தகத்தை
என்றாலும் அதில்
புதைந்திருப்பது
உன் புகைப்படம்…
வாழ்க்கையின்
முதல் படியேறி
வழுக்கி விழுந்தவன் நான்
எனக்கு வழிகாட்டியாய்
வந்தவள் நீ…
காவிய பெண்ணே
நடந்து பார்க்கலாம்
வாழ்க்கையை நோக்கி
நமக்கு
வழி தெரியும் வரை…
வாழ்க்கை பாதையில்
நான் பயணித்த போது
வழுக்கி விழுந்தது
பள்ளம் அல்ல
அது உன் உள்ளம்…
தொடரும் நினைவுகளுடன்

Add a comment October 8, 2010

இன்று வரை விடை தெரியாது….

தலையணையில் கண்ணீர் புதைக்கிறேன்;
தனிமையிலும் மலர்ந்து சிரிக்கிறேன்;

தேடி வரும் உறவுகளை உதறி எறிகிறேன்;
தோள் சாய இடமின்றி தவித்தும் நிற்கிறேன்;

மலையினில் மோதியும் எழுந்து நிற்கிறேன்;
பூக்களில் தடுக்கியும் தோற்று விழுகிறேன்;

முழுமதியை வியந்து பார்க்கிறேன்;
தெருவோர குழந்தையையும் ரசித்து சிலிர்க்கிறேன்;

கவிதைகள் கொண்டு கவலை மறக்கிறேன்;
எழுத்துக்கள் கொண்டு ஞானம் வளர்க்கிறேன்;

அலைகடல் அழகினை வியந்து பார்க்கிறேன்;
அமாவாசை இரவினையும் மனதூர ரசிக்கிறேன்;

இயலாமை கொன்று ஜெயிக்க துடிக்கிறேன்;
வலிகளை விற்று பாடம் கற்கிறேன்;

இழவு வீட்டின் ஒப்பாரியினை எளிதாய் கடந்திருக்கிறேன்;
மழழையின் அழுகையில் கசிந்திருகி பல நாள்
தூக்கம் தொலைத்து தவித்திருக்கிறேன்;

இரவினில் போர்வைக்குள் விம்மியிருக்கிறேன்;
மறுநாளே மேடையில் இடியென முழங்கியும் இருக்கிறேன்;

இதோ… இன்று வரை விடை தெரியாது
என்னுள் எதிரொலிக்கும் முழுநீள கேள்வியாய்
நான் யார்…??

Add a comment October 8, 2010

உனக்காக தோன்றிய கவிதை…

உனக்காக தோன்றிய கவிதை
என் மனதோடு விதை போட்ட கவிதை,,,,
என் நினைவோடு துளிர்விட்ட கவிதை,,,,,
இருந்தும் எழுத இயலவில்லை
என் விரல் கொண்ட பேனாவுக்கு ,,,,,
பேனாவின் நுனியினில் வடிவம் பெரும்
எழுத்துகள் போலே,,,
என் மனதோடு உரு பெரும் உன் கவிதை,,,.,

இருந்தாலும் எழுத மனமில்லை…..

எண்ணங்களில் தொடர்கிறது
உன்னை பற்றிய கவிதை,,,,,,,

வெள்ளை ஏடுகளில் எழுதி
கவிதையை முடிக்க மனமில்லை,,,,,

தினம் தினம் தொடர்கிறது
உன்னை பற்றிய கவிதை

இருந்தும் எழுத மனமில்லை…….

மீண்டும் விழி சாய்கிறேன்
எழுதாத உன் கவிதைகளின்
நினைவுகளோடே,,,,,,,,,,,

Add a comment October 7, 2010

காதல் கவி நீ…!

எனக்குள் நிறைந்து
வழிகிறாய்-நீ

 தெரிந்தும் சுமக்க
மறுக்கிறாய்
என்னை

————————-

காதல் எப்படி இருக்கும்
காட்டிக் கொடுத்தது
கண்கள் உன்னை

————————

நீ நல்லவளே இல்லை

பொய் சொல்லும்
என் கவிதைகளை
முத்தம் கொடுத்து
வளக்கிறாய்

———————–

உன்னைக் கட்டிய
சேலை கேக்கிறது

தன்னை
அழகாய் காட்டும்
உன்னை
எங்கே வேண்டினேன்
என்று

Add a comment October 7, 2010

ஒரு முறை சொல்லிவிடு அன்பே…

ஒரு முறை சொல்லிவிடு அன்பே
உன் மெளனத்தால் என்னைக் கொல்லாதே

ஓசையின்றி எனது விழிகள் ஏனோ
உன்னை எண்ணி அழுது கொண்டிருக்கிறது

ஆசைகளை சுமந்து எனது இதயம்
ஒவ்வொரு நாளும் ஏமாந்து போகிறது

நேற்று என்னை பிரிந்தவனை எண்ணி
காத்திருந்த காலங்கள் கானல்நீர் ஆனதுவோ

காற்றில் கரைந்து போய்க் கொண்டிருக்கிறது
நீ என்னுடன் பேசிய காதல் வார்த்தைகள்

காசு கொடுத்தும் கிடைக்கவில்லையே
என்னிடமிருந்து தொலைந்து போனவைகள்

உதிர்ந்திடும் கண்ணீர்த் துளிகளை தினமும்
என் விழிகளே உள் விழுங்கி விடுகிறது

காதலுக்கு மரணம் உண்டா சொல்
பின் எப்படி நம் காதல் இறந்து போனது

என் ஆறுதலை எங்கே கொண்டு சென்றாய் என் உயிர்
என்னை விட்டுப் பிரியும் முன் திருப்பிக் கொடுத்துவிடு

நீ என் மனதில் ஆறாத காயங்களாக
இன்று வேதனை தருகிறாய் எதற்காக

உன்னை நான் அளவுக்கு அதிகமாய்
நேசித்தது தானோ எனது குற்றம்

காதலென்னும் முள் கீறிய புண்களால்
என் இதயத்தில் அழியாத வடுக்களாக நீ

உன்னுள் எங்காவது நான் இருப்பேன் என்று
எண்ணி நான் தொலைந்தது தான் மிச்சம்

விழிகளில் வடியும் ஒவ்வொரு துளிகளிலும்
உன் முகம் தான் தெரிகிறது காரணம் நீ என்பதால்

அவன் நினைவின்றி வாழத் துடிக்கிறேன்
பாழாய்ப் போன மனம் மட்டும் வரமறுக்கிறதே

ஒரு இதயத்தை காயப்படுத்திய பின்பும்
உன்னால் இதயமுள்ளவனாக வாழ முடிகிறதா

காதலே நீ கலைந்து போகு முன் காதல்
என்னவென்பதை அவனுக்கு சொல்லிப் போ

திருமணம் வேண்டாம் இரு மனங்கள்
சேராத இந்த திருமணமே வேண்டாம்

ஓரு மகளாய் என் தாய் மடி சாய்ந்து என் வாழ்வின்
இன்னல்களை எண்ணி அழுது தீர்க்க விரும்புகிறேன்

Add a comment June 9, 2010

உன்னிடமிருந்து விடை பெறுகிறேன்….

விழி மூடி யோசிக்கையில் சித்திர‌மாய் நிற்கிறாய்
விழி திறந்து பார்க்கையில் நித்திறையை
போல் காற்றில் கரைகிறாய்.

நீ என்னை விட்டு விலகின பிறகு
என் நிழலும் எனக்கு அன்னியமாய் போனது.
நீ என்னை வெறுக்க உன் வீட்டு
பூனை குட்டியையும் அன்னியமாக்கதே.
உன் முழு அன்பு அதற்காவது கிடைக்கட்டும்

உன் மெளனத்தால் ஒவ்வொரு நாளும்
தீயில் விழுந்த புழுவாய் துடித்து கொண்டு இருக்கிறேன்.
உன்னை விட்டு பிரியும் நாள் நெருங்கி
கொண்டு இருப்பதை நினைக்கும் போதெலலாம்

வாழ்வின் கடைசி நொடியில் என் சந்தோசங்களை
நிறைவேற்றி கொள்வதை போல
உன்னிடம் என் ஆசைகளை சொல்ல நினைக்கிறேன்

என் மன‌ம் தாங்கிய சுமைகளை கண்ணீரால்
கரைத்து கொண்டு இருக்கிறேன்.
இதயமே இல்லாத மிருகமாய்
உன்னிடமிருந்து என் நினைவுகளையும் ,
உன்னிடமிருந்து உன் நினைவுகளையும்
எடுத்து கொண்டு விடை பெறுகிறேன்
விடை கொடு…

By. Nagulan

Add a comment June 9, 2010

தவிப்புகள்

யோசிக்க
அவகாசம் தரவில்லையட
உனது சந்திப்புகள் ….

நாழிகைக்கு ஒரு முறை
எனது சுவாசத்தில்
உனது சுவடுகள்…..

நடை பாதையில்
உன் தடம்
தேடும் எனது பாதங்கள் ….

இப்போதெல்லாம்
நான்
கண்ணாடி முன்
வெகுவாக தொலைகிறேன்
என் தெரியுமா !
அது உன்னை அல்லவா காட்டுகிறது….

Add a comment May 7, 2010

எதில் தொலைகிறதோ இந்த மனது

கட்டு பாடுகள் அற்ற மனது
கவலைகள் அற்ற வயது
விடியாத பொழுதுகள்
விலைவாசி இல்லா கனவுகள்
எனக்கும் சிறு வயதில்…..

ஆனால் !
இப்போதெல்லாம்
உழைத்து கழைத்ததைவிட
உறங்காமல் தவிப்பதே அதிகம் !

முகம்
தெரியாத
ஒருவன் பின்னே
ஓடுதே மனது….
இப்படிதான்
தனிமை என் இளமையை
கொன்று வாழ்வது போல் உணர்வு ….

பசித்த பொது
பிடிக்காத உணவு
நாடு ராத்திரியில்
நடந்து கொண்டே கனவு…..
தேநீர் குவளையில்
விடியும் பொழுது….

தனிமையான
மாலை நேரம்
மிதமான
இளையராஜா பாடல்
ஒரு குவளை தேநீர்….

எவ்வளவோ ஆசைகளோடு
உன்னை பற்றிய நினைவு
எப்படி இருப்பாய் !
எப்போது வருவாய் !
நாம் என்கு எப்படி சந்திப்போம் !
இப்படியே கலர் கலர் கனவுகள்…..

கொஞ்சம்
கொடுமையான தனிமை
அதில் கொஞ்சும் இளமை
விடிகையில் வடியும்
நினைவுகள்
குளிர் சுரமாய் கவிதைகள்….

Add a comment May 7, 2010

உன் கண்களில் இருப்பேன்….

நான் உன்னிடம் கொண்டுள்ள நட்பானது
நான் உன் கண்களில் இருப்பேன்…

இன்று நீ எனை பிரிந்தாலும்….மறந்தாலும்…………
என்றாவது நீ என்னை நினைக்கும்போது

AR.DEVA – India 

Add a comment April 8, 2010

நண்பர்கள் பிரிந்தால்

நண்பர்கள் பிரிந்தால் அது உயிரின் வலி…

நல்ல நட்பு கிடைத்தல் அரிது….

கிடைத்த நட்பை இழக்காமல் இருப்பதே

நாம் நட்புக்கு கொடுக்கும் மரியாதை…..

காலங்கள் கடந்தாலும்…..நேசம் மாறாது…பாசம் மாறாது….இது நட்பில் மட்டுமே சாத்தியம்

AR.DEVA – India

Add a comment April 8, 2010

Calendar

January 2012
M T W T F S S
« Oct    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

காதல் தாகம்

Our Services

Advertisment

Watch DVD Movies Online
 
Follow

Get every new post delivered to your Inbox.